தி. மலை: அரசு தேர்வு நடைபெறும் மையத்தை ஆய்வு செய்த கலெக்டர்
திருவண்ணாமலை வட்டம், தென்மாத்தூரில் உள்ள கரண் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வானது நேற்று (09. 11. 2024) நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தேர்வு முறையாகவும் நடைபெறுகிறதா, அடிப் படை வசதிகள் முறையாக உள்ளதா என பார்வையிட்டார். தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட வில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த தேர்வானது 6 மையங்களில் நடத்தப்பட்டது. இதில் 159 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். ஆனால், நேற்று நடந்த போட்டி தேர்வில் 611 பேர் மட்டுமே பங் கேற்றனர். 440 பேர் தேர் வில் பங்கேற்கவில்லை.