உடுமலை அருகே உப்பாறு ஓடையில் கழிவுகள் தேக்கம்
திருப்பூர், உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது உப்பாறு ஓடை, இதன் மூலம் ஏராளமான விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த நிலையில் பெதப்பம்பட்டி பகுதியில் உள்ள உப்பாறு ஓடை செல்லும் பகுதியில் இறைச்சிக் கழிவுகள், குப்பைக் கழிவுகள் அதிக அளவு கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால் குப்பை கொட்ட தடை வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.