சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதிய கொடி மரம் அமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை உறுதி அளித்துள்ளது. புதிய கொடிமரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரிஹரன் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணையில், "சேதமடைந்த பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடி மரம் மட்டுமே அமைக்கப்படும். தற்போதைக்கு பிரம்மோற்சவம் நடத்தப்பட மாட்டாது" என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.