கண்ணில் தண்ணீர் அதிகம் வடிய இரண்டு காரணங்கள் உண்டு. கண்ணீர் சுரப்பிகளில் அளவுக்கு அதிகமாகக் கண்ணீர் சுரப்பது முதல் காரணம். கண்ணில் சுரக்கும் நீரானது, நாம் ஒவ்வொருமுறை இமைகளை மூடித் திறக்கும்போது கண்ணுக்கும் மூக்குக்கும் உள்ள நுண்ணிய குழாய் வழியாகத் தொண்டையில் இறங்கிவிடும். இந்த நுண்ணிய குழாயில் அடைப்பு ஏற்படும்போது கண்ணில் நிரம்பும் நீர் வெளியே வழியத் தொடங்கிவிடும். இது இரண்டாவது காரணமாகும்.