சேலம் நகரம் - Salem City

சேலம் கலெக்டர் ஆபீசில் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயற்சி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பூமி நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் டேவிட் குமார், இவர் இன்று(அக்.29) தனது குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்து மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டு அலுவலகத்திற்குள் சென்றுள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தீக்குளிக்க முயன்ற டேவிட் குமார் கூறும்போது நான் கட்டிட வேலை செய்து வருகிறேன். எனக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். நாங்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள பொது வழித்தடத்தை பயன் படுத்தி வருகிறோம். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி பாலைய்யன் என்பவர் எங்கள் குடும்பத்தினரை மட்டும் அந்த வழியாக செல்ல விடாமல் தடுத்து மிரட்டல் விடுகிறார். மாற்று வழியில் செல்ல வேண்டும் என்றால் அரை மணி நேரம் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனர். நாங்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் எங்கள் மீது திமுக நிர்வாகி பிரச்சினை செய்து வருகிறார். இது குறித்து மனைவி ரேணுகா கேட்டபோது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். தற்போது மனைவி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எங்களை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా