சேலத்தில் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர் கைது

71பார்த்தது
சேலத்தில் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர் கைது
சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் பகுதியை சேர்ந்தவர் சாஜூ (வயது 33). இவர் அதே பகுதியில் புதிதாக வீடு ஒன்று கட்டி உள்ளார். இந்த வீட்டுக்கு சொத்துவரி நிர்ணயம் செய்து வசூலிப்பதற்காக மாநகராட்சியின் பில் கலெக்டரான கிச்சிபாளையத்தை சேர்ந்த ராஜா (45) என்பவர் சென்றார். அப்போது அவர் சாஜூவிடம் சொத்து வரியை குறைவாக மதிப்பீடு செய்வதற்கு லஞ்சமாக ரூ. 35 ஆயிரம் கேட்டார். இதற்கு அவர் சம்மதிக்கவில்லை. பின்னர் ராஜா அவரிடம் பேரம் பேசி ரூ. 30 ஆயிரம் மட்டும் கொடுத்தால் போதும் சொத்து வரியை குறைவாக மதிப்பீடு செய்து கொடுக்கிறேன் என்றார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சாஜூ இதுகுறித்து சேலம் லஞ்சஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து சாஜூவிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சஒழிப்பு போலீசார் நேற்று(அக்.28) கொடுத்து அனுப்பினர். அவர் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்துக்கு சென்றார். அங்கு பில் கலெக்டர் ராஜாவிடம் அவர் ரூ. 30 ஆயிரத்தை வழங்கினார்.
அப்போது அங்கு ஏற்கனவே சாதாரண உடையில் மறைந்திருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான லஞ்சஒழிப்பு போலீசார் விரைந்து சென்று ராஜாவை கையும், களவுமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவர் இருந்த அறை மற்றும் வெளியே நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சம்பவத்தால் சேலம் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி