பொங்கலூர்: குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
பொங்கலூர் செமலை கவுண்டன்பாளையம் அரிசன காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ்( 36). இவரது மகன் தட்சன் (10). இவன் அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள குட்டையில் குளிக்க சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக தட்சன் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினான். உடன் வந்த நண்பர்கள் சத்தம் போடவே அந்த வழியாக சென்ற ஒருவர் உள்ளே சென்று தட்சனை மீட்டு வந்தார். ஆனால் நீரில் மூழ்கிதில் தக்சன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து தகவலின் பெயரில் அவினாசிபளையம் போலீசார் அங்கு சென்று தக்சன் உடலை மீட்டு வந்து பின்னர் பிரத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி விடுமுறை என்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் பல்வேறு இடங்களில் உள்ள குளம், குட்டைகளை குளிக்க செல்கிறார்கள். ஆபத்தை உணராமல் அதில் குளிக்கச் செல்வதால் பலர் சிக்கி உயிரிழந்தும் வருகின்றனர். இதே போல் பிஏபி வாய்க்காலிலும் பல மாணவர்கள் குளித்துக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. இதனால் பல்வேறு நேரங்களில் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக கண்காணிக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தினர்.