அரசுஉயர்நிலைப் பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

81பார்த்தது
திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் இன்று பல்லடம் வட்டாட்சியர் சபரிகிரி, பல்லடம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் அதிகாரிகளுடன் ஓமலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 100 நாள் வேலை திட்ட பணி, அங்கன்வாடி மையம், அரசு உயர்நிலை பள்ளி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். நடுவேலம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் நேரில் சந்தித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை சிறப்பாக எழுத வேண்டும் எனவும் உங்கள் அனைவரையும் 11ஆம் வகுப்பில் சந்திக்கிறோம் எனவும் கூறி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக நடுவேலம்பாளையம் கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியரின் சிறப்பு நிதியில் இருந்து 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதற்காக மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி பொதுமக்கள் சால்வை அணிவித்து தங்களது நன்றிகளை தெரிவித்தனர். மேலும் தங்களது கிராமத்தில் விளையாட்டு மைதானம், நூலகம் ஆகியவற்றை அமைக்க கோரி மனு அளித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி