பைக் திருடி தப்பிச்செல்ல முயன்றபோது விபத்தில் சிக்கிய இளைஞர்

57பார்த்தது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பனப்பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ். தனது வீட்டின் வெளியே இருசக்கர வாகனத்தை நேற்று இரவு நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். இன்று காலை எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இளைஞர்கள் சிலர் இரு சக்கர வாகனத்தை திருடி சென்றதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்த நிலையில் தேவராஜ் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற இளைஞர்களை துரத்தி சென்றுள்ளார். அப்போது தாராபுரம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தை திருடி சென்ற இளைஞர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி கீழே விழுந்தனர். அவர்களை கட்டி வைத்து பொதுமக்கள் அடி வெளுத்து வாங்கினர். இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபர் மதுரை சேர்ந்த அரவிந்த்ராஜ் என்பதும் உடன் அவரது நண்பர் ஒருவரும் இருசக்கர வாகனத்தை திருடி சென்றபோது விபத்தில் சிக்கி கீழே விழுந்தனர்.
ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் அரவிந்த்ராஜை  பல்லடம் காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். மது போதையில் இருந்த அரவிந்தராஜை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். தற்போது மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அரவிந்தராஜை அனுப்பி வைத்துள்ளனர்.
காலை நேரத்தில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற இளைஞர்கள் விபத்தில் சிக்கி பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி