பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் கிராமத்தில் விவசாயத் தோட்டங்களில் பாதுகாப்புக்காக நாய்களை வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக நாய்கள் திடீரென செத்து விடுகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது "இங்குள்ள விவசாயத் தோட்டங்களில் பாதுகாப்புக்காக நாய்களை வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நாய்கள் வாயில் நுரை தள்ளி உயிருக்கு போராடிக்கொண்டும் இருந்தன. இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக தண்ணீர், மருந்து கொடுத்துள்ளனர். இருந்தபோதிலும் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்தன. அவைகள் விவசாய தோட்டத்தில் புதைக்கப்பட்டன. எனவே போலீசார் நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற மர்ம நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.