மலங்களை வீசி சென்றது யார்? டிஎஸ்பி தலைமையிலான தீவிர விசாரணை.

53பார்த்தது
பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 200 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்ததும் வகுப்பறைகளை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இன்று காலை பள்ளி திறந்தவுடன் வகுப்பறைகளை ஆசிரியர்கள் திறந்து உள்ளனர். அப்போது பத்தாம் வகுப்பு வகுப்பறையில் சுவர் மற்றும் பள்ளி மாணவர்கள் அமரும் இருக்கைகள் முழுவதும் மனித மலங்கள் வீசப்பட்டிருந்தது. தலைமை ஆசிரியர் உடனடியாக காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வகுப்பறை முழுவதும் வீசப்பட்டுள்ள மனித வளங்களை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்ட வருகின்றனர். மனித மலங்களை வீசியது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது பள்ளியில் பயிலும் மாணவர்களே இச்செயலில் ஈடுபட்டார்கள் அல்லது மர்ம நபர்கள் இச்செயலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி