8 விளையாட்டுகள் 1 மணி நேரம் தொடர்ந்து விளையாடி உலக சாதனை நிகழ்த்திய 280 மாணவ மாணவியர்கள்
தனியார் பள்ளியில் 8 விளையாட்டுகளில் தொடர்ந்து ஒரு மணி நேரம் விளையாடி உலக சாதனை - உலக சாதனை நிகழ்த்திய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் பதக்கம் வழங்கி பாராட்டு.
திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் பிரிவில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வீரத்தமிழர் தற்காப்பு கலை அறக்கட்டளை மற்றும் அபாகஸ் பள்ளி சார்பில் கின்னஸ் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்த உலக சாதனை நிகழ்வில் மாநிலம் முழுவதும் இருந்து 280 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு கராத்தே, டேக்வாண்டோ , யோகா, ஸ்கேட்டிங், சிலம்பம் உள்ளிட்ட எட்டு விளையாட்டுகளில் ஒரு மணி நேரம் தொடர்ந்து விளையாடி உலக சாதனையை நிகழ்த்தினார். இந்த உலக சாதனையை நிகழ்த்திய அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கிரகாம்பெல் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் பதக்கமும் சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.