திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு வெண்பட்டு கூடு உற்பத்தியாளர் நலச்சங்கம் மாநிலத் தலைவர் செய்தியாளர்களிடம் பேசும் போழுது, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்த கோரி
போராட்டம் நடத்தினோம். வெளியான பட்ஜெட்டில் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சுமார் 800 மாவட்டங்கள் உள்ள சூழலில் 100 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்துவதாக கூறுவது ஏமாற்றம் அளிக்கும் செயலாகும். கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிப்பதையே பட்ஜெட் காட்டுகிறது. 20 மாநிலங்களில் வெள்ளை ஈ தாக்குதலால் தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு உரிய நிவாரணம் இல்லை. உரங்கள் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருவதால் அதன் விலையும் உயர்ந்துள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை இல்லாமல் தவிக்கும் சூழலில் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யாமல் மேலும் பாதிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது ஏமாற்றத்தை அளிக்கிறது என தெரிவித்தார்.