பல்லடம் அண்ணா நகர் பகுதி தியாகராஜன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரும், உறவினரான குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்த வரதராஜன் என்பவரும் சேர்ந்து சில வருடங்களாக குப்பாண்டம்பாளையத்தில் கிருஷ்ணா பைபர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வந்துள்ளனர்.
இருவருக்கும் கருத்து வேறுபாட்டால் தியாகராஜன் நிறுவனத்தில் இருந்து வெளியேறிவிட்டு கிருஷ்ணா பைபர்ஸில் முதலீடு செய்த பணத்தையும், சொத்துக்களையும் பிரித்து கொடுக்குமாறு கேட்டு வந்துள்ளார். வரதராஜன் அதனை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இது குறித்து சாய ஆலைகள் உரிமையாளர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களில் வைத்து 5 முறைக்கு மேல் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த வித முடிவும் எட்டப்படவில்லை.
கிருஷ்ணா பைபர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரை கிருஷ்ணா பிராசஸ் என பெயர் மாற்றம் செய்து நடத்தி வந்துள்ளார். மேலும் சம்பவம் நடந்த இடம் மங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் அங்கு செல்லுமாறும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மங்கலம் காவல் நிலையத்தில் வரதராஜனின் தரப்பினர் புகார் அளித்ததை தொடர்ந்து மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 2 மணி அளவில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தியாகராஜன் வீட்டிற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்த பெண்கள் காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.