
பல்லடம்: அரசு மருத்துவமனையில் தேங்கி நிற்கும் கழிவு நீர்
பல்லடம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தின் பின்புறம் உள்ள தற்காலிக கழிவறையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருவதால் குளம் போல் தேங்கி காட்சி அளிக்கிறது. மேலும் கழிவுநீர் தேங்கி இருப்பதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. மேலும் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவி வருவதன் காரணமாக சுகாதாரத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் வலியுறுத்தி வருகின்றனர்.