துவாக்குடி: மின்சாரம் பாய்ந்து ஏழாம் வகுப்பு மாணவன் பலி
திருச்சி துவாக்குடிமலை வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் கிருஷ்ணகுமார். அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடந்த நேற்று(அக்.20) வீட்டில் அயன் பாக்ஸ் வயரை சுவிட்ச் போர்டில் இணைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் ஆறிந்த துவாக்குடி போலீசார் கிருஷ்ணகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.