திருச்சி விமான நிலையத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பேட்டி

61பார்த்தது
உயர் கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பின் முதன்முறையாக தன்னுடைய சொந்த ஊருக்கு செல்வதற்காக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கோவி செழியன், இந்தியாவிலேயே எல்லா துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்கிற அடிப்படையில் முதலமைச்சர் ஓய்வறியா உழைப்பாளியாக உழைத்து வருகிறார்.

இந்த நிலையை ஏற்கனவே உயர்கல்வியில் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கும் தமிழகம் இன்னும் மேன்மையுற மேல் நிலைக்கல்வியிலும், உயர்கல்வியிலும் புதிய புதிய பாடத்திடங்களை இணைத்து உலகளாவிய கல்வி தரத்தை வழங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பல்வேறு முயற்சிகளை முதலமைச்சர் செய்து வருகிறார். எனவே புகழ்பெற்ற துறையாக விளங்கிய உயர்கல்வி துறையை இன்னும் மேம்படுத்த இன்னும் பிரகாசமாக அனைவருக்கும் பயன்படுக் வகையில் எளிய குடும்பத்தில் பிறந்த எளியவனான என்னை முதலமைச்சர் அந்த துறையில் நியமித்து இருக்கிறார்.

எல்லோருக்கும் எல்லாம் என்கிற தத்துவம் தான் திராவிட மாடலின் அடிநாதம் அந்த அடிப்படையில் புறந்தள்ளப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த என்னை உயர்கல்வியின் அமைச்சராக முதலமைச்சர் நியமித்துள்ளார். அந்த உள்ளத்திற்கு ஈடு இணை எதுவும் கிடையாது என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி