கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் கைதாகி சிறை சென்ற நபர் சிறையில் திடீரென உயிரிழந்தார்.
அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவர்கள் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி, பழூர், காந்தி நகரைச் சேர்ந்த மருதமுத்து என்பவரது மகன் திராவிட மணி (வயது 40) இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருட்டுத்தனமாக மது விற்றதாக கூறி ஜீயபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது உடனடியாக அவர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்து விட்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி நேற்று இரவு அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். போராட்டத்தால்
அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.