திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா், கடும் வெயிலும் இருந்தது. பிற்பகல் 2மணிக்கு மேல் கருமேகங்கள் கூடி மழை பொழிவுக்கான அறிகுறிகள் காணப்பட்டன. தொடா்ந்து மழை பெய்யத் தொடங்கியது. இடைவிடாது 2 மணிநேரத்திற்கு மழை பெய்தது. இதன்காரணமாக மாநகரச் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீா் தேங்கின. மாநகரப் பகுதிகளில் ஜங்ஷன், பாலக்கரை, காந்தி மார்க்கெட், மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் மலை பெய்தது.
இந்நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை நீடிக்கும் எனவும் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதல் திருச்சி மாவட்டத்தில் அவ்வப்போது பரவலாக லேசான மழை தூறிக்கொண்டே இருந்தது.
பிற்கல் 3 மணிக்கு திருச்சி மாநகரில் கனமழை கொட்டியது. காற்றும் பலமாக வீசியது. இதனால் திருச்சி நகரம் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.