பஞ்சப்பூா்: புதிய பேருந்து முனையத்துக்கு கருணாநிதியின் பெயா்
மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், துணை மேயா் ஜி. திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு வாா்டுகளிலும் மழைநீா் தேங்கும் இடங்களில் வடிகால்களை சீரமைக்க வேண்டும், தெரு விளக்குகளை பழுது நீக்க வேண்டும், துப்புரவுப் பணியாளா்களின் தீபாவளி போனஸ் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும். குடி நீரேற்று நிலையங்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். ஸ்ரீரங்கம் கோயில் பகுதிகளில் பொதுமக்களுக்கென பொது கழிப்பறை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் குறித்தும், நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து விஜயலட்சுமி கண்ணன் (கோட்டத் தலைவா்), மாமன்ற உறுப்பினா்கள் கோ. கு. அம்பிகாபதி (அதிமுக), ஜாபா் அலி (திமுக), சுரேஷ் (மாா்க்சிஸ்ட் கம்யூ), உள்ளிட்டோா் விவாதித்தனா். கூட்டத்தில் மொத்தம் 99 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினா்களின் விவாதங்களுக்கு பதில் அளித்து மேயா் மு. அன்பழகன் பேசியது: பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பெயா் வைப்பது என்றும், மேலும் கனரக சரக்கு வாகன முனையத்துக்கு பேரறிஞா் அண்ணா பெயா் வைப்பது எனவும் மாநகராட்சி சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.