முசிறி - Musiri

எச். ராஜா மீது முசிறி போலீஸில் காங்கிரஸ் கட்சியினர் புகார்

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக பேசிய பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எச். ராஜா, உ.பி. மாநில அமைச்சர் ரகுராஜ் சிங், ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு, எம்எல்ஏ சஞ்சய் கைவாட் மற்றும் தர்வீந்தர் சிங் மர்வா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முசிறி காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு அளித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் நல்லேந்திரன், நகர தலைவர் சுந்தர்ராஜன், மாவட்டச் செயலாளர் ஜே.சி. வாசன், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் ராஜ செல்வம், முன்னாள் வட்டார தலைவர் ராஜேஷ், நகர பொருளாளர் நாராயணன், நிர்வாகிகள் பெரியசாமி, அருண், சிவாஜி, சண்முகம், வழக்கறிஞர் ஆனந்த் உள்பட பலர் இருந்தனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా