திருச்சி தெற்கு மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் மதிமுக துணை செயலாளர் கண்ணன் என்கிற ஜெயக்குமார் கடந்த மாதம் 21ஆம் தேதி திருச்சி கரூர் சாலையில் முத்தரசநல்லூர் அருகே நடந்த விபத்தில் இறந்தார். அல்லூரில் உள்ள அவரது வீட்டிற்கு திருச்சி எம்பி துரை வைகோ நேற்று நேரில் சென்று ஜெயக்குமார் மனைவி ஆனந்தி, மகன் தனுஷ்குமார், மகள் ரேஷ்மா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். இதே போன்று உடல்நலக் குறைவால் காலமான அந்தநல்லூர் ஒன்றிய அவைத்தலைவர் ஆத்மநாதன் வீட்டிற்கும் சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.