தொட்டியம் அருகே அரசலூர் ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம், தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசலூர் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம், குடிநீர் தொட்டி சுத்தம் செய்தல், சாலை அமைத்தல் உள்ளிட்ட அரசு பணிகளில் ஊராட்சித் தலைவர் சஞ்சீவி முறைகேடு செய்துள்ளதாகவும் அதனை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரசலூர் கிராமத்தில் இருந்து வந்த நூற்றுக்கணக்கானோர் திருச்சி - நாமக்கல் சாலையில் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து வந்து ஒன்றிய குழு துணைத் தலைவர் சத்தியமூர்த்தி ஒன்றிய ஆணையர்கள் செந்தில்குமார் ஞானமணி ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் தரப்பில் பொதுமக்களின் புகார் மீது விசாரணை நடத்தி தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தன