முசிறி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரேசன் சக போலீசாருடன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது முசிறி குளித்தலை பாலம் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது அந்த வழியே வந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது அவரிடம் ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. காவல் நிலையம் அழைத்து வந்து மேற்கொண்ட விசாரணையில் அவர் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த ஜானகிராமன் என்பதும் விற்பனைக்காக கஞ்சா கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதை அடுத்து ஜானகிராமனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.