காட்டுப்புத்தூர்: மழைநீரில் மூழ்கிய கோரைபுல்.. விவசாயி வேதனை

61பார்த்தது
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் அருகே சின்னபள்ளிபாளையத்தை சேர்ந்த விவசாயி சக்திவேல் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்தும் மற்றும் வங்கிகளில் கடன் பெற்றும் கோரைப்புல் சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் கோரைகளை அறுத்து வயல்வெளி பகுதிகளில் காய வைத்துள்ளார். நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக காய வைத்திருந்த கோரைப்புல் மழைநீரில் மூழ்கி சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான கோரைப்புல் சேதமடைந்தது. சுமார் மூன்று அடிக்கும் மேல் தண்ணீர் மூழ்கியிருப்பதால் கோரைப்புல் மூழ்கிய தண்ணீரில் அழுகி வீணாகியதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். விவசாயி சக்திவேலின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ரூபாய் 4 லட்சம் சேதமடைந்துள்ளது. எவ்வாறு வாழ்வாதாரத்தை மேம்படுத்தப் போகிறோம் என தெரியவில்லை என்று கூறியுள்ளார். தமிழக அரசிடம் உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி