திருச்சி: உணவு அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

65பார்த்தது
திருச்சி: உணவு அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ் பாபு. இந்நிலையில் இவர் 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் 2021 வரையுள்ள காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அதன்படி 2018 ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக ரமேஷ் பாபு மற்றும் அவருடைய மனைவி சர்மிளா பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு மொத்தமாக ரூ. 18 லட்சத்து 64 ஆயிரத்து 428 ரூபாயாக இருந்துள்ளது. விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 2018 முதல் 2021ம் ஆண்டிற்குள்ளான காலத்தில் ரமேஷ்பாபு மற்றும் அவருடைய மனைவி சர்மிளா பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ரூ. 2 கோடியே 36 லட்சத்து 60 ஆயிரத்து 294 ரூபாயாக இருந்துள்ளது. இந்த கணக்கில் அடங்கா சொத்து மதிப்பின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி