திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் காட்டுப்புத்தூரில் சார் பதிவாளர் அலுவலக புதிய கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் காட்டுப்புத்தூரில் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு புதிதாக தலா ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார்.
விழா நிகழ்வை முன்னிட்டு முசிறி மற்றும் காட்டுப்புத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன்ராஜேந்திரன், திருச்சி மாவட்ட திட்ட அலுவலர் கங்கா தாரணி, மாவட்ட பதிவர் ராஜா, பதிவுத்துறை துணைத் தலைவர் ராமசாமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர். விழாவில் திமுக நிர்வாகிகள் அரசுஅலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.