முசிறி காவல் நிலைய போலீசார் தண்டலை புத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இவர்கள் வாகனத்தணிக்கை செய்தபோது மூன்று இரு சக்கர வாகனங்களில்மூட்டைகளை வைத்துபிரித்துக் கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை துரத்தி பிடித்து மூட்டைகளை சோதனை செய்த போது தமிழக அரசால்தடை செய்யபட்டகுட்கா மற்றும் கூல்லிப்ஆகிய போதை புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் இவர்கள் தா. பேட்டை சரவணன் 47 , பொன்னாங்கண்ணி பட்டி பாரதிதாசன் 35, திருத்தலையூர் கார்த்திகேயன் 34, மற்றும் சத்தியமங்கலம் சிவபாலன் 50என்பதும் தெரிய வந்தது. இவர்களிடம் கரூர் மாவட்டம் தொழில்பேட்டையைச் சேர்ந்தமுருகன் என்பவர் சரக்குகளை கொடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. போலீசார் தகவலை அடுத்து முருகனை கரூர் மாவட்ட போலீசார் கைது செய்தனர். விசாரணையில்முருகன் பெங்களூரில் இருந்து போதை புகையிலை பொருட்களை வாங்கி வந்து இவர்களிடம் விற்றுச் சென்றது தெரிய வந்தது. போலீசார் இவர்களின்மூன்று இரு சக்கர வாகனங்களையும், 67 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களையும், நான்கு செல்போன்களையும் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து இவர்களை முசிறி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.