திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் திருத்தலையூர் ஏரி அமைந்துள்ளது. இது திருச்சி மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். திருத்தலையூர் சிறிய ஏரி மற்றும் பெரிய ஏரி இரண்டையும் திருத்தலையூரில் இருந்து கண்ணனூர் செல்லும் பாதை பிரிக்கிறது.
இரண்டு ஏரிகளின் பரப்பளவு சுமார் 700 ஏக்கர்கள் ஆகும். இந்த ஏரிகளின் மூலம் சுமார் 650 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரிகள் நிரம்பியதால் ஆதனூர், திருத்தலையூர், புதுப்பட்டி, நல்லியம்பட்டி, வெங்கடாபுரம், தண்டலை, பொன்னம்பலம், பட்டி, கீரிப்பட்டி, கட்னாம்பட்டி உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பெறுகின்றனர்.
கொல்லிமலையில் மழை பெய்து அய்யாறு வழியாக தண்ணீர் வந்து ஏரி நிரம்பியது. இரண்டு வருடத்திற்கு பிறகு இந்த ஏரிகள் நிரம்பியதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.