லால்குடி - Lalgudi

திருச்சி: விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை

திருச்சி: விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55) கொத்தனார். மது பழக்கத்திற்கு அடிமையானவர். ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியின் மகன் சரிவர வேலைக்கு செல்லவில்லை. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது எனக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த உளைச்சலில் இருந்து வந்த சுப்பிரமணி கடந்த மார்ச் 26ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை பக்கத்தில் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது உறவினர் தமிழ்வண்ணன் அளித்த புகாரின் பேரில் உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా