பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை போலீசார் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளார். சாம்சங் தொழிலாளர்கள் கைது விவகாரம் குறித்து பிற்பகலில் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.