தூத்துக்குடி: கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

77பார்த்தது
தூத்துக்குடியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு துறை சார்பில் நடைபெற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழு உள்ளிட்ட பயனாளிகளுக்கு கடன்களை தமிழக அரசின் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்;

உணவு பாதுகாப்பை பொறுத்தவரை நியாய விலைக் கடைகளுக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு நுகர் பொருள் பொருள் வானிப கழகம் சார்பில் செப்டம்பர் 1ஆம் தேதி வரை சுமார் 2. 94 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 40 ஆயிரத்து 99 விவசாயிகளுக்கு 660. 70 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது மேலும் தமிழக முழுவதும் 384 குடோன்கள் மூலம் 20. 55 மெட்ரிக் டன் அரிசி சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி