
தூத்துக்குடி: வ. உ. சி கல்வியியல் கல்லூரியில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம்
தூத்துக்குடி வ. உ. சி. கல்வியியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் த. கனகராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகமது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பல்வேறு வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்புக் கல்வி பற்றியும், கல்வியியல் பயின்ற மாணவர்கள் என்னென்ன போட்டித் தேர்வுகளை எவ்வாறு எளிதாக எழுதலாம் என்பதை உளவியல் அறிஞர் கார்டனின் நுண்ணறிவு கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்கினார். மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன் பெருமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். பின்னர் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இறுதியாக வரலாற்று துறை பேராசிரியர் கு. இராஜதுரை நன்றி கூறினார். இந்நிகழ்வில் மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.