தூத்துக்குடியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், காசநோய் இல்லா தமிழகத்திற்கான பிரச்சாரம் 100வது தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயில் முன்பிருந்து இந்த பேரணியை உறைவிடம் மருத்துவர் டாக்டர் சைலஸ் ஜெபமணி முன்னிலையில் மருத்துவமனை முதல்வர் டாக்டர் சிவகுமார் தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், காசநோய் ஒழிப்பு திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாளையங்கோட்டை சாலை, திருச்செந்தூர் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி, பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.