தூத்துக்குடியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 4 வயது சிறுமி அனாமிகா பெண்கள் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி ஒரு கிலோமீட்டர் மற்றும் 250 மீட்டர் ஓடி ஷேடோ பாக்சிங் செய்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்
தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அனுபிரியா இவரது மகள் லிடியா ஹசில் அனாமிகா நான்கு வயது சிறுமியான அனாமிகா எல்கேஜி படித்து வருகிறார் இவர் கடந்த மூன்று மாதங்களாக ஓட்டபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்
இந்நிலையில் இன்று அனாமிகா உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சுமார் ஒரு கிலோ மீட்டர் மற்றும் 250 மீட்டர் தூரம் ஓடியபடி ஷேடோ பாக்சிங் செய்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்
இதனைத் தொடர்ந்து கேம்ஸ் வில்லா பயிற்சி மையத்தில் வைத்து நான்கு வயதில் இந்த சாதனையை புரிந்த சிறுமி அனாமிக்காவிற்கு நோபல் உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது மேலும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை படைத்த சிறுமிக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்தனர்