பேருந்தில் மணி பர்சை ஆட்டைய போட்ட பெண் வீடியோ காட்சிகள்

85பார்த்தது
தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் மணி பர்சை ஆட்டைய போட்ட பெண்;
போலீசார் பேருந்தில் பொருத்தப்படிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி நேற்று காலை தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்துள்ளது. அப்போது பேருந்தில் ஒட்டப்பிடாரத்தில் இருந்து பயணம் செய்த பெண் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் இறங்கும்போது தனது பணப்பை (மணி பர்ஸ்) தேடியுள்ளார். அப்போது பணப்பை காணாமல் போனதையடுத்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்றுக் கொண்ட மத்திய பாகம் போலீசார், தனியார் பேருந்த்தில் பொருத்தப்படிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தேடிய போது, வீடியோவில், மஞ்சள் கலர் சேலை மற்றும் மஞ்சள் கலர் ஜாக்கெட் அணிந்திருந்த பெண் எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஏ பி சி மகாலட்சுமி கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் ஏறி ஜெயராஜ் ரோட்டில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். இறங்க போகும் முன் அந்தப் பெண் அவரது மணி பர்சை திருடியது சிசிடிவி காட்சியில் தெரிய வந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

மேலும், அந்த மணி பர்ஸ்-ல் 3, 000 பணம் மற்றும் ஏடிஎம் கார்டு உள்ளிட்டவை இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி