தூத்துக்குடி: வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி: அறிவிப்பு
தூத்துக்குடி மாநகராட்சி வரிகளை அக். 31க்குள் செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம் என்று ஆணையர் லி. மதுபாலன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2024-2025 ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை இம்மாத இறுதிக்குள் (31. 10. 2024 ) செலுத்தி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 5 சதவீதம் தள்ளுபடியினை பெற்று பயன்பெறுமாறும் மாநகராட்சி வளர்ச்சி பணிகளில் தங்களின் பங்களிப்பினை வழங்கிடுமாறும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.