தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர் பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் சற்று இருந்தாலும் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வந்தது. நேற்று காலையில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
கோவில்பட்டி நகர் மட்டுமின்றி கழுகுமலை, வானரமுட்டி, குளத்தூர், நாலாட்டின்புதூர், இளையரசனேந்தல், இனாம்மணியாச்சி, திட்டங்குளம், மூப்பன்பட்டி, இலுப்பையூரணி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருவதால் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாலத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர்.