தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை ரூ. 6 கோடி 87 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இதன் திறப்புவிழா நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவதி தலைமை வகித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய சந்தையை கனிமொழி கருணாநிதி எம்.பி., நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் திருச்செந்தூர் நகராட்சி அலுவலக புதிய கட்டிடம், குளச்சல் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், செங்கோட்டை நகராட்சி வாரச்சந்தை என புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர். மேலும் விழாவில் சுமார் இரண்டு கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.