கோவில்பட்டி: பெண்ணிடம் 5½ பவுன் தங்க செயின் பறிப்பு

52பார்த்தது
கோவில்பட்டி: பெண்ணிடம் 5½ பவுன் தங்க செயின் பறிப்பு
கோவில்பட்டியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5½ பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகர் 6ஆவது தெருவை சேர்ந்த சாஸ்தா மனைவி கோமதி (55). இவர், நேற்று அப்பகுதியில் 4ஆவது தெருவில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்றுவிட்டு, திரும்பி வந்துகொண்டிருந்தாராம். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், கோமதி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 5½ பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பினாராம். இதுகுறித்து கோமதி அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி