தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள திட்டக்குளம் ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு; மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியுடன் அருகே உள்ள திட்டக்குளம் ஊராட்சியை இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து திட்டக்குளம் ஊராட்சி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகை விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குளம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைத்தால் தாங்கள் காலனி பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் மேலும் கலைஞர் கனவு திட்டம் 100 நாள் வேலைவாய்ப்பு மற்றும் விவசாய சலுகைகள் பறிக்கப்படும் ஆகையினால் தாங்கள் பகுதியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசு அரசாணை திரும்ப பெறவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.