கோவில்பட்டியில் தொடர்ந்து 6 மணி நேரம் பெய்து வரும் கனமழை

73பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்தது. கடந்த 6 மணி நேரமாக தொடர்ந்து விடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதுமட்டுமின்றி கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாலம், கிருஷ்ணா நகர் ரயில்வே சுரங்கப் பாலம், பெத்தேல் ரயில்வே சுரங்கப் பாலம், இலுப்பையூரணி ரயில்வே சுரங்கப் பாலம் உள்ளிட்ட ரயில்வே சுரங்கப் பாலங்களில் மழைநீர் தேங்கியதால் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் செல்கின்றனர். கோவில்பட்டி நகர் மட்டுமின்றி கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர், எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி