கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 2. 06 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்களை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ. 2. 06 கோடி மதிப்பில் 2 தளங்களுடன் 11 வகுப்பறைகள் கொண்டதாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதையடுத்து, பள்ளியில் நடைபெற்ற விழாவில் நகர்மன்றத் தலைவர் கா. கருணாநிதி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பிரபாகரன், பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயலதா, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மாரீஸ்வரன், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.