கோவில்பட்டி அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 70 வயது முதியவரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், பீக்கிலிபட்டி நடுத்தெருவைச் சோ்ந்தவா் சப்பாணி மகன் செல்லத்துரை (70) என்பவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, செல்லத்துரையை நேற்று கைது செய்தனர்.