தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

82பார்த்தது
தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
தூத்துக்குடியில் டாஸ்மாக் பாரில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் ஒருவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி முத்தையாபுரம் பொன்னாண்டி நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் குமாரசாமி (48), கூலி தொழிலாளி. முத்தையாபுரம் மேல தெருவைச் சேர்ந்தவர் தனுசுராஜ் மகன் அருண்பாண்டி (32), மெக்கானிக். இவர்கள் இருவரும் நேற்று (பிப்ரவரி 20) இரவு அங்குள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்திக்கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த அருண்பாண்டி, குமாரசாமியை அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து அருண்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி