

மன்னை ஏழை மாரியம்மன் கோவிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தர்கள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி விழல்கார தெருவில் உள்ள ஏழை மாரியம்மன் கோவில் பங்குனி விழாவில் ஞாயிற்றுக்கிழமை இன்று மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளம் மேல் கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடிகளை எடுத்து வந்தனர். பின்னர் ஏழை மாரியம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்று மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் கஞ்சிவாத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.