சட்டப்பேரவையில் அதிமுகவினர் கடும் அமளி

67பார்த்தது
சட்டப்பேரவையில் அதிமுகவினர் கடும் அமளி
எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதிக்க வேண்டும் எனக்கூறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அமளியில் ஈடுபட்டோரை சமாதானப்படுத்தும் முயற்சியில் சபாநாயகர் ஈடுபட்டுள்ளார். இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் கேள்வி நேரம் முடிந்த பின்னர் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக பேச கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததில் சபாநாயகர் அனுமதி மறுத்ததால் கடுமையான வாக்குவாதம் தொடர்ந்து வருகிறது. அவை முன்னவர் துரைமுருகன் அதிமுகவினரை அவையில் இருந்து வெளியேற விரும்பினால் செல்லலாம் என கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்தி