தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மீனவர்களின் நலன் காக்கும் திட்டங்களை அறிவித்துள்ளார். அதன்படி, “ரூ.60 கோடியில் பாம்பன் பகுதியில் மீன்பிடி துறைமுகப்பணிகள் நடைபெறும், தங்கச்சிமடம் பகுதியில் ரூ.150 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்” என்றார். மேலும், “மீன், சேற்று நண்டு வளர்ப்பு தொழிலுக்கு ரூ.25.82 கோடியில் உபகரணம் வழங்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.576.73 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்றார்.