புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வசித்து வரும் லாவண்யா என்பவரது 5 மாத குழந்தை தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டது. வீட்டிற்குள் நுழைந்த இருவர், நகையை பறித்துக்கொண்டு, குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசிச் சென்றதாக தாய் லாவண்யா கூறியிருந்தார். இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும் விரக்தியில், குழந்தையை தாயே கொலை செய்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.