திருத்துறைப்பூண்டி - Thiruthuraipoondi

திருவாரூரில் விஷ வாயு தாக்கி இருவர் பலி

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட மேலவடம்போக்கித் தெருவில் கழிவுநீர் (பம்ப்பிங்) உந்து வெளியேற்றும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் பாதாள சாக்கடை கிணறு அமைந்துள்ளது. இதில் வீடுகளில் உள்ள செப்டிக்டேங் தொட்டியில் இருந்து தனியார் டேங்கர் லாரி மூலம் உறிஞ்சி எடுக்கப்படும் மலக்கழிவு நீரை நகராட்சி நிர்வாக அனுமதியோடு விதிமுறைகளுக்கு முரணாக மேலவடம்போக்கித் தெரு பகுதியில் உள்ள பாதாள சாக்கடை கிணற்றில் இறக்குவது வாடிக்கையாக இருந்துவருகிறது. நேற்று(அக்.27) மாலை இத்தகைய பாதாள சாக்கடை கிணற்றின் மூடியை திறந்து தனியார் டேங்கர் லாரியில் இருந்து மலக்கழிவு நீரை ஓஸ் பைப் மூலம் இறக்க முற்பட்ட போது தனியார் டேங்கர் லாரி நிறுவனத்தில் பணியாற்றிய 35 வயதுடைய மணிமாறன் என்ற இளைஞர் தவறி பாதாள சாக்கடை கிணற்றில் விழுந்தார். இவரை காப்பாற்ற திருவாரூர் நகராட்சி கழிவுநீர் பப்பிங் நிலையத்தில் வேலைபார்த்துவந்த நகராட்சி ஒப்பந்த ஊழியர் அருணாசலம் (30) என்ற இளைஞர் பாதாள சாக்கடை கிணற்றில் இறங்கிய நிலையில் இவ்விருவரும் விஷவாயு தாக்கியதில் பரிதாபமாக உயிரழந்தார். தகவல் அறிந்த திருவாரூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பாதாள சாக்கடை கிணற்றில் உயிரிழந்த மணிமாறன் மற்றும் அருணாசலம் இருவரது உடலையும் வெளியே எடுத்தனர். பின்னர் இவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

வீடியோஸ்


திருவாரூர்